பொது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், அரசியல் முறைமையில் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்வது அவசியம் என்று சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டு மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது மிகவும் அவசியமானது.
அரசமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் ஊடாக ஆட்சி அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மக்கள் விரும்புகின்றனர். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
Discussion about this post