இலங்கையில் தொற்றா நோய்களின் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாகவும், பொது மக்களை அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை இலங்கை சுகாதார அமைச்சு அமைச்சின் போஷாக்குப் பிரிவு பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணருமான லக்மினி நயனா மகோத ரத்ன விடுத்துள்ளார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
நாட்டில் தொற்றா நோய்களின் பரவல் அதிகரித்துள்ளது. மக்கள் தங்களது நாளாந்த உணவுகளில் கவனமா இருக்க வேண்டும். குறிப்பாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கட்டுப்பாட்டுடன் உணவு வகைகளை உண்ண வேண்டியது முக்கியமானது.
சர்க்கரை, உப்பு, கொழுப்பு உணவுகளை உண்ணும் பொழுது பொது மக்கள் அதிக அவதானம் செலுத்த வேண்டும். அதேசமயத்தில் உணவு வகைகளைப் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் போல பிரித்துக் கொள்ள வேண்டும். பச்சை நிற உணவுகள் சிறந்த ஊட்டச்சத்தாக இருப்பதுடன், அவ்வகையான உணவுகள் சிறந்த தெரிவாக இருக்கும்.
மஞ்சள் நிற உணவுகள் ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன், அவதானமாக தெரிவு செய்து உண்ண வேண்டும். இருப்பினும், சிவப்பு நிற உணவுகள் கட்டுப்பாட்டுத் தெரிவாக இருக்க வேண்டும்.
இதேவேளை, சந்தையில் விற்கப்படும் குளிர்பானங்கள் ஆபத்தை விளைவிக்கலாம். அதேசமயம், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் போஷாக்கு குறித்து அக்கறை கொள்ள வேண்டும்.” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post