பொதுநலவாய விளையாட்டுப் போட்டிக்காக இலங்கையில் இருந்து சென்ற இருவர் அங்கிருந்து காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டனின் பர்மிங்ஹாமில் 22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஐந்தாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. அதன்பின்னர் இலங்கை தடகள வீரரும் ஒரு உயர் அதிகாரியும் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது
அவர்கள் காணாமல் போனது தொடர்பாக இலங்கை அணி நிர்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளதுடன், பர்மிங்காம் நகர பொலிசார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்காக அனைத்து இலங்கை விளையாட்டு வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் 180 நாள் விசா வழங்கப்பட்டுள்ளது.
Discussion about this post