எதிர்வரும் பொதுத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பல மருத்துவர்கள் போட்டியிடஉள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ருக்சான் பெல்லான அண்மையில் கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
பல மாவட்டங்களில் பல வைத்தியர்கள்தேசிய மக்கள் சக்திக்காக இந்த வருடம் பல மாவட்டங்களில் பல வைத்தியர்கள் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தலில் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவவிற்கு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Discussion about this post