பலரும் சந்திக்கும் தலைமுடி பிரச்சனைகளில் பொடுகை கட்டாயம் குறிப்பிடலாம்.
தோல் வறண்டு போவதால் அழற்கு ஏற்பட்டு வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் பொடுகு உருவாகும்.
பொடுகு அதிகம் இருந்தால் முடி உதிர்தல் இருக்கும், சிலருக்கு நெற்றி, கழுத்தின் பின்பகுதி. காதுகளுக்கு அருகிலும் பொடுகு வரலாம்.
பிரச்சனையை பெரிதாக்கவிடாமல் தொடக்கத்திலேயே வீட்டு வைத்தியத்தின் மூலம் சரிசெய்வது பற்றி தெரிந்து கொள்வோம்.
சிலருக்கு உடற்சூட்டால் பொடுகு தொல்லை ஏற்படும் என்பதால் வெந்தயத்தை அரைத்து தலைக்கு தேய்த்து குளிப்பது நல்லது, தேங்காய் எண்ணெயுடன் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்தாலும் பலனை பெறலாம்.
முடி பிரச்சனைகளுக்கு கற்றாழை தீர்வை தரும், கற்றாழையின் ஜெல்லை எடுத்து தலையின் மேல்பகுதியின் நன்றாக தேய்த்து மசாஜ் செய்த பின்னர் 20 நிமிடங்கள் கழித்து குளித்தால் பலன் உண்டு.
வேப்பிலைக் கொழுந்துடன் துளசி சேர்த்து மையாக அரைத்த பின்னர் தலையில் தேய்த்து குளிக்கலாம் அல்லது துளசி, கருவேப்பிலை சேர்த்து அரைத்து இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு தேய்க்கலாம்.
தேங்காய் எண்ணெயுடன் சம அளவு வேப்ப எண்ணெய் சேர்த்து உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும், சிறிது நேரம் கழித்து தலையை நன்றாக அலசினால் பொடுகு பிரச்சனைக்கு தீர்வு உண்டு.
தயிருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு தேய்த்து வருவதும் நல்லது, மிக முக்கியமாக தலைக்கு சூடான தண்ணீரில் குளிக்க வேண்டாம், மிதமான சூடே சிறந்தது.
Discussion about this post