பேஸ்புக், இன்ஸ்டா ஆகிய சமூக ஊடகங்களை கனேடிய மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனேடிய ஒலிபரப்பு குழுவின் நண்பர்கள் என்ற அமைப்பினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இவ்வாறு பதிவிடுவதனை தவிர்த்து எதிர்ப்பை வெளியிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய பயனர்களுக்கு செய்திகளை பார்வையிட முடியாத வகையில் இந்த இரண்டு சமூக ஊடகங்களும் எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
மெட்டா நிறுவனத்தின் மீதான அதிருப்தியை வெளியிடுவதற்கு கனேடியர்கள் இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
Discussion about this post