இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளன் இன்று இந்திய உயர் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்திய உயர் நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
இந்தத் தீர்ப்புத் தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூட்டாட்சி தத்துவத்துக்கும், மாநில சுயாட்சிக்கும் இலக்கணமாக அமைந்த தீர்ப்பு. நீதி, சட்டம், அரசியல், நிர்வாகவியல் வரலாற்றில் இடம்பெறத்தக்க தீர்ப்பு என்று தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் கடந்த 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றார். அவரது விடுதலைக்காக அவரது தாயார் அற்புதம்மாள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்தார்.
Discussion about this post