வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான சிறிய ரக துப்பாக்கியை வைத்திருந்ததாக கூறப்படும் நபர் ஒருவரும் அந்த துப்பாக்கியின் உரிமையாளரும் கம்பஹா யக்கல பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கி 9 மீ. எம். வெடிமருந்துகளைப் பயன்படுத்தக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட பிரதிகாவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தரவின் விசேட அறிவுறுத்தலின் பேரில், இராஜகிரிய முகாமின் காவல்துறை விசேட அதிரடிப்படையின் நிலைய பொறுப்பதிகாரி பிரதம காவல்துறை பரிசோதகர் நடிக சில்வாவினால் இந்த துப்பாக்கியுடன் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Discussion about this post