இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரகப் பெற்றோலின் விலை லீற்றருக்கு 40 ரூபாவால் குறைக்கப்படுகின்றது. இதுவரை 450 ரூபாவாகக் காணப்பட்ட ஒக்டேன் 92 ரகப் பெற்றோலின் புதிய விலை 410 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரகப் பெற்றோலின் விலை லீற்றருக்கு 30 ரூபாவாகக் குறைக்கப்படவுள்ளது. இதுவரை 540 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 95 ரகப் பெற்றோலின் புதிய விலை 510 ரூபாவாகும்.
ஏனைய எரிபொருள்களின் விலைகளில் மாற்றங்கள் எவையும் இல்லை. விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் இந்த விலை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
Discussion about this post