பெற்றோலுக்காகக் காத்திருந்த கார் சாரதி ஒருவர் நூலிழையில் உயிர்தப்பிய சம்பவம் ஒன்று கொழும்பில் நடந்துள்ளது.
கொழும்பு 7 பகுதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காகக் காரில் ஒருவர் காத்திருந்தார். அந்தக் கார் தரித்து நின்ற பகுதியில் கட்டட நிர்மாண பணிகள் நடந்துகொண்டிருந்தது.
கட்டட நிர்மாணப் பணிக்கு பயன்படுத்தப்படும் இரும்புக் குழாய்யொன்று திடீரென காரின் மீது வீழந்துள்ளதில் காரின் முன்பக்க கண்ணாடியை சாரதி இருக்கைக்கு அருகில் குத்திட்டு நின்றது. காரில் இருந்தவர் தெய்வாதீனமாகத் தப்பிக்கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Discussion about this post