கியு.ஆர். முறைமையைப் பொருட்படுத்தாமல் எரிபொருளை விநியோகித்த 66 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவதை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இடைநிறுத்தியுள்ளது.
முன்னதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் 40 சிபெட்கோ எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டதுடன், இந்தியன் ஓயில் நிறுவனத்திற்கு சொந்தமான 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு நேற்று (07) முதல் எரிபொருளை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இந்த நடவடிக்கையை தாம் பாராட்டுவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ (07ஆம் தெரிவித்தார்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கியு. ஆர். முறைமைக்கு அமைய எரிபொருளை வழங்குவதற்கான அறிவுறுத்தல்களை மீறியதன் காரணமாக 66 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளை வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த முறைப்படி எரிபொருளை விநியோகிக்குமாறு தமது சங்கம் அறிவித்துள்ளதாகவும் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
Discussion about this post