இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தொடரும் நிலையில், மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
இலங்கைக்கு எரிபொருள் தாங்கிக் கப்பல்கள் வந்துள்ளதுபோதும், அவற்றுக்கான கட்டணங்கள் செலுத்தப்படாததால் அவற்றில் இருந்து எரிபொருள்கள் தரையிறக்கப்படவில்லை.
கப்பல் கட்டணங்களைச் செலுத்துவதற்கான டொலர் இலங்கை அரசாங்கத்திடம் இல்லாததால் இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் 40 ஆயிரம் மெற்றிக்தொன் டீசல் மற்றும் 20 ஆயிரம் மெற்றிக்தொன் பெற்றோல் மட்டுமே உள்ளதால், அவற்றின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பலவற்றில் பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்புக்கள் முடிந்துள்ள நிலையில், மக்கள் கடும் எரிபொருள் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர்.
Discussion about this post