ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பினை எதிர்வரும் 20ஆம் திகதி புதன்கிழமை நடத்த கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது
அரசியலமைப்பு மற்றும் 1981ஆம் 2ஆவது இலக்கத்திற்கமைய ஜனாதிபதி தெரிவு செய்யும் சட்டத்தின் 4ஆவது உறுப்புரையின் பிரகாரம் நாடாளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு கூடவுள்ளது.
கட்சி தலைவர் கூட்டத்தில் முன்னர் தீர்மானித்ததற்கமைய எதிர்வரும் 20ஆம் திகதி வாக்கெடுப்பின் ஊடாக புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 19ஆம் திகதி வேட்பு மனுக்கல் கோரப்பட்டு,எதிர்வரும் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வாக்கெடுப்பின் ஊடாக புதிய ஜனாதிபதி தெரிவு இடம்பெறும்.
Discussion about this post