நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபாயினை பெற்றுக்கொடுக்க முடியாதவர்கள் பெருந்தோட்ட தொழிலாளர்களை எப்படி சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) கேள்வி எழுப்பியுள்ளார்.தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்துக்கொண்டு நேற்றையதினம் (12) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “எதிர்கட்சி தலைவர் கொத்மலை பகுதியில் வைத்து தோட்ட தொழிலாளர்களுக்கு 2500ரூபாய் சம்பளத்தை பெற்று தருவதாக எதற்கு கூறினார்.மலையக தலைமைகள்எதிர்கட்சி தலைவரை வழிநடத்தும் முறை தவறாக காணப்படுகிறது அதற்கு அவரை குற்றம் சொல்லி தவறில்லை அவர் அருகாமையில் இருக்கின்ற மலையக தலைமைகள் முறையாக இல்லை.
இலங்கை தொழிலாளர் காங்ரஸ் அரசாங்கத்தோடு இருந்தமையால் தான் தோட்ட தொழிலாளர்களுக்கு 1350ரூபாய் பெற்றுக்கொடுக்க முடிந்தது அன்று நாங்கள் அரசாங்கத்தில் இருக்கவில்லை.ஆனால் அரசாங்கத்தோடு இருந்தவர்களுக்கு 50ரூபாயினை பெற்றுக்கொடுக்க முடியவில்லை நாட்டின் தலைமைத்துவத்தை தவிர மலையத்தின் தலைமைத்துவம் தான் முக்கியம் இதுவரையிலும் எந்த இடத்திலும் மலையகத்தையும் மலையக மக்களையும் தலைகுனிய செய்ததில்லை எனக்கு இன்று வயது 29உலகத்தில் உள்ள 90இளம் தலைவர்களில் நானும் ஒருவன்.1700ரூபாய் சம்பளம் மெற்றுதருவதாக கூறி இன்று 1350ரூபாய் பெற்றுக்கொடுத்துள்ளதாக விமர்சனத்தை முன்வைக்கின்றார்கள் ஆரம்பத்தில் 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் என முன் கூட்டியே நாங்கள் அறிவித்திருந்தோம்.சம்பள பிரச்சினைஎந்த இடத்திலும் அடிப்படை சம்பளம் 1700ரூபாய் என அறிவிக்கவில்லை ஆனால் ஊக்கிவிப்பு கொடுப்பணவு 350 ரூபாவை கட்டாயம் நாங்கள் பெற்றுக்கொடுப்போம் சம்பள பிரச்சினையினை பொருத்தவரையில் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் எப்போதுமே மக்களுக்கு தீர்வினை பெற்று தந்துள்ளது
தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுத்த சம்பளத்தை விமர்சிப்பவர்களுக்கு ஒன்றை நான் கூறுகிறேன் .இ.தொ.கா.பெற்றுக்கொடுத்த சம்பளத்தை விமர்சனம் செய்பவர்கள் முடிந்தால் அந்த சம்பளத்தை வாங்குவதற்கு மறுப்பு தெரிவியுங்கள் சிலருக்கு ஜனாதிபதி வழங்கிய அஸ்வெஸ்ம கானிஉருதிபத்திரம் கேஸ் எரிப்பொருள் மின்சாரம் குடிநீர் சம்பளம் அனைத்தும் வேண்டும் ஆனால் ஜனாதிபதி ரணில் வேண்டாமென சிலர் கூறுவது வேடிக்கையாக உள்ளது.ஜனாதிபதியின் கொள்கைஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தில் ஒரு இலட்ச்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்பினை பெற்றுத்தருவதாக அறிவித்துள்ளார்
Discussion about this post