பெருந்தோட்டப் பகுதிகளில் லயன் அறைகளில் வாழும் மக்களுக்கு கிராமத்தில் வாழ்வதற்கான உரிமையை வழங்கும் நோக்குடன், குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள லயன் அறைகள் காணப்படும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான காணிகளின் குத்தகையை இரத்து செய்ய எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நுவரெலிய (Nuwara Eliya) மாவட்ட வர்த்தகர்களுடன் நேற்றைய தினம் (10) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், இவ்வாறு குத்தகை உரிமம் இரத்து செய்யப்படும் காணிகளை மீள அரசாங்கத்திற்கு கையகப்படுத்தி அந்த மக்களுக்கு கிராமத்தில் வாழ்வதற்கான உரிமையை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காணி உரிமை
அத்தோடு, பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படுவதுடன் அந்த காணிகளை வீடுகளை நிர்மாணிப்பதற்கான உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் என அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும், இவ்வாறு லயன் அறைகள் அமைந்துள்ள பகுதிகள் கிராமங்களாக மாற்றப்பட்டதை அடுத்து குறித்த பகுதிகளில் விளையாட்டு மைதானங்களை போன்று பொது இடங்களும் அமைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post