வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பை முன்னிறுத்தி ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க முயன்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியால் அவமதிக்கப்பட்டுத் திருப்பி அனுப்ப்பட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவையை உடனடியாக நியமிக்காவிட்டால் வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்படும் என்று அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுக்க முயன்றனர் என்று கூறப்படுகின்றது.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவானது என்றும், நாமல் ராஜபக்சவுக்கும் அமைச்சுப் பதவி வழங்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்தது என்றும் தெரியவருகின்றது.
பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தத்துக்கு அடிபணியாத ஜனாதிபதி, தேவை ஏற்படின் வரவு – செலவுத் திட்டத்தைத் தோற்கடியுங்கள் என்று தெரிவித்ததுடன், நான் நினைக்கும்போதே அமைச்சரவை நியமிக்கப்படும் என்று கண்டிப்புடன் பதிலளித்து அந்தக் குழுவைத் திரும்பியனுப்பினார் என்று தெற்குத் தகவல்கள் கூறுகின்றனர்.
Discussion about this post