ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியை எவரும் கவிழ்க்க முடியாது. அதேவேளை, ஜனாதிபதியையும் பதவியிலிருந்து எவரும் விரட்டவும் முடியாது என்று முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. ஒருவரையொருவர் பதவி விலகவும் கோரவில்லை.
நாட்டில் தற்போது பெரும்பாலான ஊடகங்கள் எமது அரசுக்கு எதிராகவே செய்திகளை வெளியிடுகின்றன. இதன் பின்னணியில் யார் செயற்படுகின்றார்கள் என்று தெரியவில்லை.
ஊடகங்களில் வெளிவரும் செய்திகளைப் போன்று ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. ஜனாதிபதியைப் பதவி விலக வேண்டும் என்று பிரதமரோ அல்லது பிரதமரைப் பதவி விலக வேண்டும் என்று ஜனாதிபதியோ கோரவில்லை.
அதனால் ஊடகங்கள் உண்மைத்தன்மையுடன் செய்திகளை வெளியிட வேண்டும். நடுநிலையுடன் செயற்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post