பெண்களால் பாலியல் ரீதியில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் பட்சத்தில் அது தொடர்பில் முறையீடு செய்ய வயதுவந்த ஆண்களுக்கும் உரிமை உள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
சமூகத்தில் பதிவாகும் சம்பவங்களை அவதானிக்கும் போது பெண்களினால் ஆண்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
1995 ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க தண்டனைச் சட்டத் திருத்தச் சட்டத்தின் 345ஆவது பிரிவின்படி இத்தகைய குற்றச் செயல்கள் தொடர்பாக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஆண், பெண் என்ற வேறுபாட்டை கருத்திற் கொள்வதில்லையென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஆண்களோ அல்லது சிறுவர்களோ பெண்களால் ஏதேனும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும்படி பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
Discussion about this post