கொரோனா தடுப்பூசிகளின் தொடர்ச்சியாக பைசர் மற்றும் மோடெர்னா போன்றவற்றிக்கு பூஸ்டர் உருவாக்கப்பட்டது போன்று மூன்றாவது டோஸை பெற்றுக்கொள்ள தயாராக
இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதியும்
ஆலோசனை வழங்கியுள்ளார் என்று கோவிட் – 19 செயலணியின் பிரதானியான,
இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சகல சுகாதார பணியாளர்களுக்கும் முதலில், மூன்றாவது
தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என சுகாதாரப்
பிரிவு அறிவித்துளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post