விண்வெளியில் இருந்து பூமிக்கு ஏற்படும் ஆபத்துகள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ள தனியாக ஒரு துறையை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வைத்துள்ளது. குறித்த துறையில் உள்ளவர்கள் முக்கியமாக சிறுகோள் தொடர்பில் ஆய்வு செய்வார்கள்.விண்வெளியில் சிறிதும் பெரிதுமாக எண்ணில் அடங்காத பாறைகள் சுற்றி வருகின்றன. இதையே அவர்கள் சிறுகோள் என குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில், 620 அடி உயரமான கட்டிடத்தின் அளவுள்ள ஒரு சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை நாசா தெரிவித்துள்ளது.பூமியில் இருந்து சுமார் 2,850,000 மைல்கள் தொலைவில் இந்த (ஜேவி33) என்ற இந்த சிறுகோள் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு மணித்தியாலத்திற்கு 24,779 மைல் வேகத்தில் பயணித்து வரும் இந்த சிறுகோள், நிலவை விட 3 மடங்கு தொலைவில் இருந்தாலும் ஒப்பிட்டளவில் பூமிக்கு மிக நெருக்கத்தில் வரவுள்ளது.இந்த சிறுகோளை நாசா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
Discussion about this post