உக்ரைனின் தெற்கு நகரத்திலிருந்து வெளியேறுவதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், கெர்சன் நகரைச் சூழவுள்ள பகுதிகளில் கடைசி நாளில் பெரும் வெற்றிகள் பெறப்பட்டுள்ளன என்று உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
கெர்சனுக்கு வடக்கே 50 கிலோமீற்றர் தொலைவில் உள்ள முக்கிய நகரமான ஸ்னிஹூரிவ்கா மீண்டும் கைப்பற்றப்பட்டுள்ளது என்று உக்ரைனிய துருப்புக்கள் கூறுகின்றன.
அதேநேரம், ரஷ்ய துருப்புக்கள் நகரத்தை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் படைகள் வெளியேறும் செயல்முறை முடிவதற்கு வாரங்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெர்சனில் இருந்து ரஷ்ய பெருமளவில் வெளியேறியதற்கான உடனடி ஆதாரம் எதுவும் இல்லை என்றபோதும், கெர்சனில் இருந்து வெளியேறுவதாக விடுத்த அறிவிப்பு, ரஷ்யாவின் முயற்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகின்றது.
இந்த அறிவிப்பில், உக்ரைனிய அதிகாரிகள் சந்தேகம் கொண்டிருப்பதுடன், இது ஒரு பொறியாக இருக்கலாம் என்று எச்சரித்துள்ளனர்.
Discussion about this post