ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான சிறிலங்கா அரசாங்கத்தால், சில புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கியுள்ளது.
உலகத் தமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் சிறிலங்கா அரசாங்கத்தால் நீக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் தமிழர் பேரவை, கனடா தமிழ்க் காங்கிரஸ் ஆகிய அமைப்புக்கள் மீதான தடையையும் சிறிலங்கா அரசாங்கம் நீக்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.
Discussion about this post