புலம்பெயர்ந்தோரை, குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கும் விவகாரம் தொடர்பில், கனேடிய நீதிமன்றம் ஒன்று முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது.
கனடாவில், 2016ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடையில் மட்டும், 8,360 புலம்பெயர்ந்தோர் கனடாவின் எல்லை பாதுகாப்பு ஏஜன்சியால் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
அப்படி அவர்கள் குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கப்படுவதை எதிர்த்து, பெடரல் அரசுக்கு எதிராக வழக்குத் தொடர ஒன்ராறியோ நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
புலம்பெயர்ந்தோர், குற்றவாளிகளைப் போல குற்றவாளிகளுடன், கைவிலங்கிடப்பட்டு, ஆடைகளைக் களைந்து சோதனையிடப்பட்டு, எங்கும் செல்லவோ, யாரையும் சந்திக்கவோ கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கொடூரமான குற்றம் செய்தவர்களுடன் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறியுள்ளார் நீதிபதி Benjamin Glustein.
அப்படி இந்த புலம்பெயர்ந்தோர் வழக்குத் தொடர்வதைத் தடுப்பதற்காக, பெடரல் அரசு சார்பில் சட்டத்தரணிகள் 15 எதிர்ப்புகள் அல்லது மறுப்புகள் தெரிவித்த நிலையில், அவற்றை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
நீதிமன்றத்தின் இந்த முடிவை, பாதிக்கப்பட்டவர்களும், புலம்பெயர்தல் ஆதரவு அமைப்பினரும் வரவேற்றுள்ளார்கள்.
Discussion about this post