இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பெருமளவான இளைஞர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் வாய்ப்பை தேடி சென்றுள்ளனர்.
இவ்வாறு சென்ற அவர்கள் அனுப்பிய பணம் டிசம்பர் மாதத்தில் 475.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
2021 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த தொகை 46 வீத அதிகரிப்பு என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2021 டிசம்பரில் வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பிய தொகை 325.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post