ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் இருந்து மூன்று வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடும் பரீட்சை திணைக்களத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (18) பெற்றோர் பரீட்சை திணைக்களத்திற்கு (Department of Examinations, Sri Lanka) முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் வட்ஸ்அப் ஊடாக பரிமாறப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
புலமைப்பரிசில் வினாத்தாள்இந்தநிலையில், இது தொடர்பாக நேற்று (17) விசேட விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து, புலமைப்பரிசில் வினாத்தாளில் இருந்து மூன்று வினாக்களை நீக்கி அனைத்து மாணவர்களுக்கும் அந்த மூன்று வினாக்களின் மதிப்பெண்களை சமமாக வழங்க தீர்மானிக்கப்பட்டது.
அத்தோடு, பரீட்சையின் வினாத்தாளைப் புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் ஊடாக பகிர்ந்த பாடசாலை அதிபரும் ஆறு ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்திருந்தது.
Discussion about this post