புற்றுநோய்க்கு(cancer) மருத்துவர்கள் பரிந்துரைத்த கீமோதெரபி சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துவிட்டதாகவும், வரும் மாதங்களில் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் அரச நடவடிக்கைகளில் பங்கேற்க உள்ளதாகவும் பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன்(Kate Middleton) நேற்று முன்னதினம் (09) காணொளி மூலம் அறிவித்துள்ளார்.புற்றுநோயில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும், இனிமேல் ஆரோக்கியமாக இருப்பதில் கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.முதன்முறையாக வெளியான காணொளி பிரித்தானிய வருங்கால ராணியான 42 வயதான இளவரசி கேட் மிடில்டன், காணொளி செய்தியை வெளியிட்டபோது, தனக்கு புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்ததாகவும் கீமோதெரபியை முடித்துக் கொள்ள முடிந்த நிம்மதி விவரிக்க முடியாதது என்றும், கடந்த 9 மாதங்கள் தனது குடும்பத்திற்கு மிகவும் கடினமான காலமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்
வாழ்க்கை ஒரு நொடியில் மாறக்கூடும்இளவரசி கேட், வாழ்க்கை ஒரு நொடியில் மாறக்கூடும் என்றும், அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் தெரியாத பாதைகளின் புயல்களை எதிர்கொள்ள ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.
புற்றுநோய் பயணம் சிக்கலானது, பயமுறுத்துவது மற்றும் அனைவருக்கும் கணிக்க முடியாதது என்றும் அவர் கூறினார்.
Discussion about this post