தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க உள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேசத்தின் பெரியளவிலான உதவிகள் அவசியமான சூழலில் சர்வதேச ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காகவே இந்த தேசிய அரசாங்கம் உருவாக்கப்படவுள்ளது என்று கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராகவும், பஸில் ராஜபக்ச நிதி அமைச்சராகவும் நீடிப்பார் என்றும் கூறப்படுகின்றது.
தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க மட்டுமே உள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து பிரிந்து செல்லும் சுமார் 15 பேர் கொண்ட குழு தேசிய அரசாங்கத்தில் இணையவுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post