டெம்பெஸ்ட் என்ற திட்டத்தின் மூலம் 2035 ஆம் ஆண்டுக்குள் புத்தம் புதிய போர் விமானத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பான் மற்றும் வெளிநாடுகளால் மேற்கொள்ளப்படும் முதல் பாதுகாப்பு சாதன தயாரிப்பு திட்டமாக இது கருதப்படுகிறது.
பிரிட்டனின் “பிஏஇ சிஸ்டம்ஸ் பிஎல்சி”, ஜப்பானின் “மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ்” மற்றும் இத்தாலியின் “லியோனார்டோ” ஆகிய நிறுவனங்கள் இணைந்து விமானத்தை வடிவமைத்துள்ளன.
இந்த விமானம் மிகவும் மேம்பட்ட இலத்திரனியல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் போர் திறன்களை உள்ளடக்கியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான், இத்தாலி மற்றும் பிரிட்டன் ராணுவ பலத்தை மேம்படுத்த ரஷ்யா மற்றும் சீனா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தயாராகும் நடவடிக்கையாக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக வர்ணனையாளர்கள் கூறுகின்றனர்
Discussion about this post