ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஃப்ளைடுபாய் ஆகிய விமான சேவை நிறுவனங்களுடன் இணைந்து தனது விமான சேவைகளை மேலும் விரிவுபடுத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று (09) முதல் நடைமுறைக்கு வரும் இந்த இன்டர்லைன் (interline) ஒப்பந்தத்தின் படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் பயணிக்கும் பயணிகள் துபாய் விமான நிலையத்தின் ஊடாக ஆபிரிக்கா, மத்திய ஆசியா, மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் ஒற்றை விமானப் பயணச்சீட்டை பயன்படுத்தி பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்டர்லைன் ஒப்பந்தம்
அதேவேளை , ஃப்ளைடுபாய் விமான சேவை நிறுவனத்தின் ஒற்றை விமானப் பயணச்சீட்டுடன், தெற்கு மற்றும் மெல்போர்ன், சியோல், சிங்கப்பூர் மற்றும் டோக்கியோவிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானங்கள் மூலம் பயணிக்க முடியும்.
இந்த புதிய கூட்டாண்மை (இன்டர்லைன் ஒப்பந்தம்) குறித்து, ஃப்ளைடுபாய் விமான சேவை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி காயித் அல் கைத் கருத்து தெரிவிக்கையில்,
“ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக மற்றும் சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உடனான இந்த புதிய கூட்டாண்மை (இன்டர்லைன் ஒப்பந்தம்) குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
2010 ஆம் ஆண்டில் ஃப்ளைடுபாய் விமான சேவை நிறுவனம் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பித்ததிலிருந்து, எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான பயணத்திற்கான பெரும் தேவையை நாங்கள் கண்டுள்ளோம்.
இந்த புதிய கூட்டாண்மை (இன்டர்லைன் ஒப்பந்தம்) மூலம், எங்கள் பயணிகள் உலகம் முழுவதும் பயணம் செய்ய விரும்புவார்கள்.” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post