புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகருக்கு அறிவித்துள்ள நிலையில், அதன்மூலம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு “செக்” வைப்பதற்கு எதிரணிகள் தீர்மானித்துள்ளன என்று அறியமுடிகின்றது.
மக்களின் தீவிர எதிர்ப்பால் நாட்டில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதில் ஜனாதிபதியாக நியமித்திருந்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பதில் ஜனாதிபதியாக ரணில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டால், அதைக் கொண்டு ரணிலைப் பதவியில் அகற்றுவதற்கான முயற்சிகளை எதிரணிகள் ஆரம்பித்துள்ளன. புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டால், அவரே பதில் ஜனாதிபதி பதவியை வகிக்கத் தகுதியானவர் என்ற வாதத்தை நாடாளுமன்றத்தில் எதிரணிகள் முன்வைக்கவுள்ளன என்று அறிய முடிகின்றது.
Discussion about this post