யாழ்.நகரின் மத்திய பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெருக்கடிகளைக் கருத்திற்கொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தூர தனியார் பஸ் தரிப்பிடத்திலிருந்து அனைத்து உள்ளுர் மற்றும் வெளியூருக்கான தனியார் பயணிகள் போக்குவரத்து சேவைகள் நேற்று செவ்வாய்க்கிழமை காலை முதல் ஆரம்பிக்கப்பட்டன.
போக்குவரத்து சேவைகளை யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவணணன், ஆணையாளர் இ.த.ஜெயசீலன், தனியார் பஸ் சங்கங்களின் தலைவர் பிரதிநிதிகள், பொலிஸார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், தற்போது ஏற்படுகின்ற சில குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் ஆராய்ந்தனர்.
தற்போதைய போக்குவரத்து சேவைளில் ஏற்படுகின்ற இடர்பாடுகளை இனங்கண்டு அடுத்த வாரம் இந்தத் திட்டம் மேம்படுத்தப்படும் என்று மாநகர முதல்வர் தெரிவித்தார்.
Discussion about this post