படுபயங்கரமான புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமூலத்துக்கு எதிராக மக்கள் திரள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று (29.03.2023) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் கொண்டுவரத் தீர்மானித்துள்ள புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் படுபயங்கரமானது.
இந்தச் சட்டமூலம் நடைமுறையானால் ஜனநாயகம் பற்றி கதைக்க முடியாது.
இப்படியான கூட்டங்களை நடத்தும் எம்மைக் கைது செய்யலாம். எனவே, இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக மக்கள் திரள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Discussion about this post