சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய பதில் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கு முன்னர் காவல்துறை மா அதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) அந்தப் பதவியின் கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்து நீதிமன்றத்தால் இடைநிறுத்தப்பட்டதையடுத்து, காவல்துறை மா அதிபர் பதவி வெற்றிடமாக இருந்தது.இந்நிலையிலேயே சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் ஆயுதப்படைஇதேவேளை, நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உத்தரவு பிறப்பித்துள்ளார்
இன்று (27) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கும் உத்தரவு அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி நேற்று (26) வெளியிட்டார்.
Discussion about this post