இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியைக் கொண்டாடுவதற்குப் பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்ந்த இளைஞன் ஒருவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே காயமடைந்துள்ளார்.
புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியைக் கொண்டாடுவதற்கு வீதியின் நடுவே பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்ந்த நிலையில் பட்டாசுகள் வெடிக்காமலிருந்துள்ளது.
இதனையடுத்து இளைஞன் குறித்த பட்டாசுகளைச் சோதனையிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அந்த பட்டாசுகள் திடீரென வெடித்துள்ளது.இதில் து, காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post