ஏப்ரல் 18 ஆம் திகதி 15 பேர் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 22 ஆக அதிகரிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளாரென அறியமுடிகின்றது.
அமைச்சரவைக்கு நான்கு சிரேஷ்ட உறுப்பினர்களை நியமிக்கவே ஜனாதிபதி திட்டமிட்டிருந்தார். ஏனைய பதவிகள் இளையவர்களுக்கு வழங்கப்படவிருந்தது.
எனினும், கடந்த சில நாட்களாக ஜனாதிபதிக்கு கிடைத்த கோரிக்கைகளை அடுத்து மேலும் பல மூத்தவர்களை அமைச்சரவையில் நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன, டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கும் அமைச்சரவை பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post