இலங்கையில் இன்று (18) புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. இன்று பகல் 10.30 மணியளவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
முன்னைய அமைச்சரவையில் அங்கம் வகித்த சமல் ராஜபக்ச, பஸில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மற்றும் சஷீந்திர ராஜபக்ச ஆகியோர் புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கவில்லை.
அதேநேரம், மஹிந்தானந்த அளுத்கமகே, ஜேஸ்டன் பெர்ணான்டோ போன்ற ஜனாதிபதியின் தீவிர ஆதரவாளர்களும் தற்போதைய அமைச்சரவையில் உள்ளடக்கப்படவில்லை.
அரசாங்கத்தின் மீது மக்களுக்கு எழுந்துள்ள தீவிர அதிருப்தியை அடுத்தே, இவர்கள் அமைச்சுப் பதவிகளைத் தவிர்த்துள்ளனர் என்று கூறப்படுகின்றது. மறுபுறத்தில் புதிய அமைச்சரவையில் பெண்கள் எவருக்கும் இடமளிக்கப்படவில்லை.
புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களின் விவரம்
தினேஷ் குணவர்தன- உள்நாட்டு அலுவல்கள், உள்விவகார, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்
டக்ளஸ் தேவாநந்தா- கடற்றொழில்
ரமேஷ் பத்திரண- கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில்
பிரசன்ன ரணதுங்க- பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை
திலும் அமுனுகம- போக்குவரத்து மற்றும் கைத்தொழில்
கனக ஹேரத்- நெடுஞ்சாலைகள்
விதுர விக்ரமநாயக்க- தொழில்
ஜானக்க வக்கும்புர- விவசாய மற்றும் நீர்ப்பாசனம்
செஹான் சேமசிங்க- வர்த்தக மற்றம் சமுர்த்தி அபிவிருத்தி
மொஹான் பிரியதர்ஷன டி சில்வா- நீர் வழங்கல்
விமலவீர திசாநாயக்க- வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு
கஞ்சன விஜேசேகர- மின்சக்தி மற்றும் எரிசக்தி
தேனுக விதானகமகே- இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை
நாலக கொடஹேவா- ஊடகத்துறை
சன்ன ஜயசுமன- சுகாதாரம்
நசீர் அஹமட்- சுற்றாடல்
பிரமீத பண்டார தென்னகோன்- துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை
Discussion about this post