நாளை திங்கட்கிழமை புதிய அமைச்சர்கள் சிலர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர் என்று சிறிலங்கா ஜனாதிபதி செயலக வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.
கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சர்களாக 18 பேர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் நாளை மீண்டும் 10 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
இந்த அமைச்சர்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரும் உள்ளடங்குகின்றார் என்று தெரியவருகின்றது. அதேநேரம், இந்த மாத இறுதிக்குள் இன்னும் சில அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளனர் என்றும் அறிய முடிகின்றது.
Discussion about this post