மீனகயா புகையிரதத்தில் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தம்பதிகளை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிணை கிடைத்ததும் இன்று இருவருக்கும் திருமணம் செய்து வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குழந்தையின் பெற்றோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
பண்டாரவளை நன்னடத்தை உத்தியோகத்தர் விடுத்த கோரிக்கையை அடுத்து, குழந்தையின் போசாக்கு தேவையை கருத்தில் கொண்டு குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, பண்டாரவளை நன்னடத்தை அதிகாரியின் கடுமையான கண்காணிப்பின் கீழ் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் சந்தேகத்திற்குரிய தம்பதியினரின் பெற்றோருக்கு குழந்தையின் போசாக்கு தேவைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post