Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

பிலிப்பைன்ஸின் முக்கிய தீவை கைப்பற்ற துடிக்கும் சீனா

August 10, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
பிலிப்பைன்ஸின் முக்கிய தீவை கைப்பற்ற துடிக்கும் சீனா
0
SHARES
Share on FacebookShare on Twitter

தாய்வான் சீன மோதலையடுத்து பிலிப்பைன்ஸ் தாமஸ் ஷோல் தீவு விவகாரத்தில் சீனா தற்போது மோதலை
ஆரம்பிக்கும் நோக்கில் செயற்பட்டு வருகிறது.

வட சீன கடலில் இணையும் மலேசியா, வியட்னாம், ப்ரூனே, தாய்வான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடல்
பகுதிகள் அனைத்தும் தனக்கு சொந்தமானது என சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

பிலிப்பைன்ஸிற்கு சொந்தமான பலவான் எனும் தீவிலிருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் இரண்டாம் தாமஸ் ஷோல்
உள்ளது. பிஆர்பி ஸியர்ரா மேட்ரே எனும் பிலிப்பைன்ஸ் நாட்டு போர்கப்பல், இரண்டாம் உலக போரில் பயன்பட்டு
வந்தது. இதன் பயன்பாட்டு காலம் முடிவடைந்ததும் அக்கப்பலை பிலிப்பைன்ஸ் இரண்டாம் தாமஸ் ஷோல் பகுதியில்
நிறுத்தியது.

அக்கப்பலை பிலிப்பைன்ஸ் நாட்டின் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த பிற கப்பல்களின் பல்வேறு பயன்பாடுகளுக்கு ஒரு
தளமாக பிலிப்பைன்ஸ் பயன்படுத்தி வந்தது.

அப்பகுதிக்கு அருகில் உள்ள மிஸ்சீஃப் ரீஃப் எனும் கடற்பாறை பகுதியை 1995-ல் சீனா கைப்பற்றியதற்கு பதிலடியாக
பிலிப்பைன்ஸ் அக்கப்பலை இரண்டாம் தாமஸ் ஷோல் பகுதியில் 1999-ல் நிலைநிறுத்தியது. தற்போது இக்கப்பலால்
சீனாவிற்கும், பிலிப்பைன்ஸிற்கும் இடையே சச்சரவு எழுந்துள்ளது.

அக்கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும் ஷோல் தங்களுக்கு சொந்தமான ரெனாய் ஜியாவ் பகுதி என்றும் பிலிப்பைன்ஸ் அந்த
இடத்தில் வேண்டுமென்றே, சட்டவிரோதமாக அக்கப்பலை நிறுத்தியிருப்பதாகவும் அதனை உடனே அங்கிருந்து
அகற்றவேண்டும் என்றும் தொடர்ந்து சீனா வலியுறுத்தி வருகிறது.

இக்கப்பலில் உள்ளவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை கொண்டு சென்ற ஒரு சிறிய கப்பல் மீது தனது நாட்டு கப்பல்
ஒன்றிலிருந்து சீனா நீர் பாய்ச்சும் இயந்திரங்களை கொண்டு நீரை பாய்ச்சி விரட்ட முயற்சித்ததாக பிலிப்பைன்ஸ்
குற்றம்சாட்டியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில், மீண்டும் ஒருமுறை சீனா இக்கப்பலை அப்புறப்படுத்த வலியுறுத்தியதாகவும் அதற்கு பிலிப்பைன்ஸ்
மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Tags: #China#Philippines#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

கனடாவில் புதிய கோவிட் தொற்று திரிபு

Next Post

அழகுராணி போட்டியில் மேலாடையை அகற்றுமாறு தொந்தரவு; அழகிகள் முறைப்பாடு

Next Post
அழகுராணி போட்டியில் மேலாடையை அகற்றுமாறு தொந்தரவு; அழகிகள் முறைப்பாடு

அழகுராணி போட்டியில் மேலாடையை அகற்றுமாறு தொந்தரவு; அழகிகள் முறைப்பாடு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.