நடைமுறை பிரச்சினைகள் காரணமாக எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்சையை ஒரு மாத காலத்துக்கு பிற்போடும் நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயாராகும் காலத்தை கருத்திற்கொண்டே இந்த முடிவை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த உயர்தரப்பரீட்சையின் முடிவுகளை ஓகஸ்ட் மாதத்தில் வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காலக்கட்டத்துக்குள் உயர்தரத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களை கொண்டு விசேட பயிற்றுவிப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சீருடையில் சென்றால் மாத்திரமே பேரூந்துகளுக்கான பருவச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளமுடியும் என்ற நியதியை மாற்றி, ஏனைய ஆடைகளில் செல்லும் மாணவர்களுக்கும் பருவச்சீட்டுக்களை விநியோகிக்க தாம் பணிப்புரை விடுக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post