நுவரெலியா பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழ் பத்திரம் பெறுவதற்காக செல்லும் பொதுமக்களுக்கு இறப்பு சான்றிதழ் பெறும் பத்திரத்தை வழங்குவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.இந்நடவடிக்கையால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
பிறப்பு சான்றிதழ் விண்ணப்ப படிவம்
இந்நடவடிக்கையானது ஒரு மாதத்திற்கும் மேலதிகமாக நடைபெற்று வருகிறதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிறப்பு பதிவை மேற்கொள்ள செல்லும் மக்களுக்கு நுவரெலியா பிரதேச அலுவலகத்தில் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ் விண்ணப்ப படிவத்தில் இறப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் படிவத்தில் சிங்கள மொழியில் இறப்பு என குறிப்பிடப்பட்ட சொல்லை வெட்டி விட்டு அதற்கு பதிலாக ஆங்கில மொழியில் birth என எழுதப்பட்டு காணப்படுகிறது. இதனால் தமிழ் மொழி மாத்திரம் தெரிந்தவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
அதேவேளை இது சம்பந்தமாக பொறுப்பு கூற வேண்டிய அதிகாரியிடம் வினவிய போது இவ்வாறான நடவடிக்கை கடந்த ஒரு மாதத்திற்கு மேலதிகமாக நடைபெறுவதாக அசமந்தமாக அவர் பதில் வழங்கியதாகவும் கூறப்படுகின்றது.
Discussion about this post