மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு மலிவு விலையில், புதிய திட்டத்தினை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது மொபைல் போனில் நமக்கென்று ஒரு நம்பருடன் சிம் கார்டு கொடுக்கப்படும். இந்த சிம் கார்டை பேன்ஸி நம்பர் என்று அதிக பணம் கொடுத்து வாங்கி வரும் வாடிக்கையாளர்கள் அதிகமாகவே இருக்கின்றனர்.
ஆனால் நமது பிறந்த தேதியை மொபைல் எண்ணாக மாற்றும் திட்டத்தை ஜியோ கொண்டு வந்துள்ளது. ஆம் VIP Number வரிசையில் இந்த நுகர்வோர் எண்ணை தேர்ந்தெடுக்க வேண்டுமாம்.
இதற்கான வழிமுறைகள் என்ன? எவ்வளவு பணம் செலவாகும்? என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த நம்பரை தெரிவு செய்யும் முதல் நான்கு அல்லது ஆறு எண்கள் நிலையானதாக இருக்கும் நிலையில், மீதமுள்ள நம்பரை உங்களுக்கு பிடித்தவாறு வைத்துக்கொள்ளலாம்.
வழிமுறைகள் என்ன?
முதலில் https://www.jio.com/selfcare/choice-number/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். இதில் சுய பாதுகாப்பு பிரிவிற்கு செல்லவும் (Self Care Section). MyJio மொபைல் செயலி மூலம் பயனர்கள் நேரடியாக இதனை அணுகலாம்.
இதனைத் தொடர்ந்து பயனர்கள் மொபைல் நம்பர் தேர்வு பகுதிக்கு (Mobile Number Selection Section) செல்லவும். தொடர்ந்து தங்களது தற்போதைய எண்ணை உள்ளிட்டு, அதனை OTP மூலம் உறுதி செய்யவும் வேண்டும்.
பின்பு உங்களுக்கு விருப்பமான எண்ணை மாற்றுவதற்கு விருப்பம் வழங்கப்படும். இதில் கடைசி 4 அல்லது 6 இலக்க எண்களை தேர்வு செய்யவும்.
பின்பு பணம் செலுத்தும் ஆப்ஷனுக்குள் சென்று, அங்கு ரூ. 499 கட்டணமாக செலுத்தினால், வெறும் 24 மணிநேரத்தில் புதிய மொபைல் நம்பர் செயல்பட ஆரம்பித்து விடுமாம்.
Discussion about this post