பனிப்பொழிவு மற்றும் கடும் குளிர் காரணமாக பயண இடையூறு ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக கூறி அம்பர் எச்சரிக்கை
விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
கடும் பனிப்பொழிவு காரணமாக பயண இடையூறு மட்டுமின்றி மின்வெட்டுக்கும் அதிக வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.
இந்த புதிய எச்சரிக்கையானது இங்கிலாந்தின் வடபகுதியை அதிகமாக பாதிக்கும் என்றே கூறப்படுகிறது.
சமீப நாட்களாக நாடு முழுவதும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அம்பர் எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது. சாலையை பயன்படுத்துவோருக்கு இது உகந்த தருணம் அல்ல எனவும் வானிலை ஆய்வு மைய
அதிகாரி நீல் ஆம்ஸ்ட்ராங் எச்சரித்துள்ளார்.
பிரித்தானியாவில் உறையவைக்கும் மழை என்பது மிக அரிதான ஒன்று என குறிப்பிட்டுள்ள அவர், இதனால் பயண
இடையூறு ஏற்படுவதும் முன்வெட்டும் எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post