நிரந்தமான முடிவொன்றை பெற்றுகொள்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரித்தானியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி
விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட்டிடம் இந்த வேண்டுகோளை
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்தார்.
நேற்று நடை பெற்ற இச் ந்திப்பின்போது தமிழ் மக்களின் பிரச்சினை
சம்மந்தமாக பிரித்தானிய கொண்டிருக்கும் கரிசனை மற்றும் அதற்காக வழங்கி
வரும் ஒத்துழைப்புக்கும் சம்பந்தன் நன்றி தெரிவித்தார்.
இரண்டாக காணப்பட்ட நாட்டை 1933 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிரித்தானியா
சேர்த்த பின்னர் தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரஜைகளாக ஆக்கப்பட்டார்கள்
என்றும் இரா.சம்பந்தன் அவரிடம் எடுத்துரைத்தார்.
Discussion about this post