பர்மிங்காமில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போன இலங்கையைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆனால் காணாமல் போன மூன்று பேரில் ஒருவரை இன்னும் காணவில்லை என பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளது
ஒரு மல்யுத்த வீரர், ஜூடோ நட்சத்திரம் மற்றும் ஜூடோ பயிற்சியாளர் திங்கட்கிழமை முதல் காணாமல் போயுள்ளனர்.
மூவரும் முன்னதாகவே தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைத்ததால் இங்கிலாந்தை விட்டு வெளியேற முடியவில்லை.
அவர்கள் காணாமல் போனதை அடுத்து, பர்மிங்காமில் உள்ள இலங்கை அணியில் எஞ்சியிருந்த அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் அதிகாரிகள் தற்போது ஆவணங்களை அகற்றியுள்ளனர்.
ஆனால் இரண்டு பேர் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இரண்டு பேரில் 30 வயதுடைய ஒரு பெண் மற்றும் 40 வயதில் ஒரு ஆணும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது. அவர்கள் ஓகஸ்ட் முதலாம் திகதி காணாமல் போனதாகக் கூறப்பட்டது. இருவரும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post