பிரித்தானியாவில் வாழ்க்கைக்கு உண்டான அடிப்படை செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், 10 சதவிகித இளைஞர்கள் அங்காடிகளில் திருடுவதாக ஆராய்ச்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் பிரித்தானியாவில் வாழ்க்கை செலவு அதிகரிப்பதாக ஆய்வு சொல்கிறது. இதனால் பிரித்தானியாவில் உணவு பொருட்கள் விற்கும் பல் பொருள் அங்காடிகளில் அதிக அளவில் திருட்டு நடப்பதாக தெரிய வந்துள்ளது.
மெட்ரோ ஊடகம் அறிவித்த அறிக்கையின் படி 10% இளைஞர்கள் , குறிப்பாக சூப்பர் மார்கெட்டில் அதிகப்படியாக திருடுவதாகவும், இதற்கு காரணம் வாழ்க்கை செலவு அதிகரித்தது தான் எனவும் கூறியுள்ளனர்.
பிரித்தானியாவின் பணவீக்கம் பல மாதங்களாக இரட்டை இலக்கத்தில் உள்ளதாகவும் (சமீபத்திய புள்ளிவிவரம் 10.4% ஆகும்), இதனால் உணவு மற்றும் எரிபொருள் செலவுகள் உச்சத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு மற்றும் குளிர்பானங்களில் விலை இந்த ஆண்டில் 19.1% என்ற அளவில் இரட்டிப்பாக அதிகரித்திருப்பதால், குடும்பங்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்வது கடினமாக உள்ளதெனவும், அதிகப்படியான உணவுகளை இறங்குமதி செய்வது தான் காரணம் என தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (ONS) சமீபத்திய தரவு தெரிவிக்கிறது.
கடந்த செப்டம்பர் வரையிலான புள்ளியியல் விவரத்தின் படி, சூப்பர் மார்கெட்டில் திருட்டு நடைபெறுவது 22 சதவீதம் அதிகரித்து வருவதாக தி இன்டிபெண்டண்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Discussion about this post