பிரான்ஸில் தற்போது அதிகமான விற்பனை செய்யும் பொருளாக சிறிய எரிவாயு அடுப்பு மாறியுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் கூறுகின்றன.
குளிர்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் மின்சாரம் தடை செய்யப்படும் என பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்கள் மத்தியில் குளிர்காலத்தை சமாளிக்க முடியாத அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் மாற்று நடவடிக்கைளை தேடுகின்றனர்.
அதற்கமைய, கடந்த ஓரிரு நாட்களாக பிரான்ஸின் பல பகுதிகளில் சிறிய எரிவாயு அடுப்பு விற்பனை சூடுபிடித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதேசமயம் கடும் குளிர்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் மின்வெட்டு அச்சுறுத்தல்களின் விளைவாக, மக்கள் இவ்வாறு எரிவாயு அடுப்பை கொள்வனவு செய்வது அதிகரித்து வருகிறதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post