விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால், இலங்கை அரசியல்வாதிகள் தற்போது நடந்துகொள்வது போல் பைத்தியகாரத்தனமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாங்கள் நாட்டுக்காக செய்த அர்ப்பணிப்புகளின் பிரதிபலன்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், ஒருவேளை பிரபாகரன் இருந்திருப்பார் என்றால், நாட்டின் அரசியல்வாதிகள் இப்படி மேலும் கீழும் குதித்து பைத்தியக்காரத்தனமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என்றும் கூறியிருக்கின்றார்.
போராட்டத்தின் மூலம் இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றும் நடவடிக்கையை நான் எதிர்பார்க்கின்றேன் என்று கூறிய சரத் பொன்சேகா, எனினும் அதைப் புரிந்துகொள்ளாதவர்கள் போராட்டத்துக்குள் இருப்பது வருத்தமளிக்கின்றது என்றும் கூறினார்.
Discussion about this post