பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 50 மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூச்சுத் திணறலுக்கு ஆளாகிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரயவருகின்றது.
இந்தச் சம்பவம் இன்று பாணந்துறை நகரில் நடந்துள்ளது. பாடசாலையை அண்மித்த பகுதியில் ரயர்கள் எரியூட்டப்பட்டமையால் மாணவர்களுக்கு சுவாசக்கோளாறுகள் ஏற்பட்டிருக்கலாம் என பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயினும் மாணவர்களின் சுகவீனத்துக்கான காரணம் மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று தெரிவித்தனர்.
Discussion about this post