இலங்கையில் உள்ள பிரபல சுப்பர் மார்க்கெட்டான கார்கில்ஸில் இளம் பெண் ஒருவர் ஊழியர்களால் தாக்கப்பட்ட காணொளி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹன்வெல்ல கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் பெண் வாடிக்கையாளரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அதேவேளை தாக்குதலுக்கு உள்ளான பெண் ஹேலிஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி என்று தெரிவிக்கப்படுகிறது. அந்த பெண்னின் ஆடைகளை களைந்து சோதனையிடும் காட்களும் வெளியாகி பெரும் சர்சாஇயை தோறுவித்துள்ளது.
இந்த சம்பவம் சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதேவேளை இந்த சம்பவம் குறித்து கார்கில்ஸ் வெளியிட்ட அறிக்கையில்,
சுப்பர் மார்க்கெட்டில் திருட்டு தொடர்பான எங்கள் விற்பனை நிலையத்தில் நடந்த ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம். இந்த நடத்தை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
கார்கில்ஸ் நிறுவனத்தின் செயல்முறையுடன் இவ்வாறான செயல் ஒரு போதும் ஒத்துப்போகவில்லை என்பதால், குறிப்பிட்ட ஊழியர்களின் நடத்தை குறித்து நாங்கள் அதிர்ச்சியும் வெட்கமும் அடைகிறோம்.
தாக்குதலில் ஈடுபட்ட ஊழியர்களை இடைநிறுத்திவிட்டு விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளது.
Discussion about this post